• Login / Register
  • District wise

    கன்னியாகுமரி திருவிழா அம்மன் கோவிலில் கழிவறை, குளியலறை வசதி ஏற்படுத்த கோரிக்கை

    ஆம்பூர், செப்.23-

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் கன்னிகாபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற திருவிழா அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.

    இக்கோவிலில் இருந்து திருப்பதி திருமலைக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு ஆண்டுதோறும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இக்கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் பக்தர்களின் பயன்பாட்டிற்காக கழிவறை மற்றும் குளியலறை வசதிகள் இல்லாததால், அவற்றை உடனடியாக அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாநில தலைவர் முருக சரவணன் ஆம்பூர், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் மணிகண்ட பிரபுவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

    மனுவை பெற்றுக்கொண்ட ஆய்வாளர், கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    Leave A Comment

    Newsletter

    Subscribe to our newsletter to stay.